பேரிடர் மேலாண்மை, தீத் தடுப்பு குறித்து பாதுகாப்பு செயல்முறை விளக்கம்

பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புச் செயல்முறை விளக்கம் குறித்த பயிற்சி, தீத் தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சிகள் அவிநாசி தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.


பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புச் செயல்முறை விளக்கம் குறித்த பயிற்சி, தீத் தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சிகள் அவிநாசி தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் உத்தரவுப்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அவிநாசி வட்டாட்சியர்  வாணிலட்சுமி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். 
மாவட்ட உதவி  தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட்ரமணன், நிலைய அலுவலர்கள்  பாஸ்கரன் (திருப்பூர் வடக்கு),  சண்முகம்(திருப்பூர் தெற்கு),  பாலசுப்பிரமணியம் (அவிநாசி), ஹரிராமகிருஷ்ணன் (உடுமலை), தனசேகரன் (வெள்ளக்கோவில்),  ராஜசெயசிம்மராவ் (தாராபுரம்), திருப்பூர் தீ தடுப்புக் குழு அலுவலர்கள் பொன்னுசாமி, விசாகன் உள்பட 40க்கும் மேற்பட்ட மாவட்ட தீயணைப்புக் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்று விளக்கமளித்தனர். 
இதில், தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்தின்போது துரிதமாக தீயை அணைப்பது, பேரிடர்க் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. 
மேலும் கூடுதல் தீவிபத்து தடுப்பு உபகரணங்கள் மூலமாக சிறப்புப் பயிற்சியும் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com