சுடச்சுட

  

  அரசு உத்தரவை மீறி கடைகளை மிரட்டும் போலீஸார்: மாவட்ட நிர்வாகத்துக்கு சிஐடியூ கோரிக்கை

  By DIN  |   Published on : 14th June 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்யலாம் என மாநில அரசு உத்தரவு  பிறப்பித்தும், இரவு 11 மணிக்கு மேல் கடைகளைத் திறந்துவைக்கக் கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதால் அவர்களை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
  திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டக் குழு கூட்டம், காமராஜர் சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பாலன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி ஆகியோர் மேல் கமிட்டி முடிவுகளை விளக்கினர்.  இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்காமல் காலி செய்யக் கூடாது. தென்னம்பாளையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும். 
  24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்யலாம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் மாநகர,  மாவட்ட போலீஸார் இரவு 11 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வைக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். 
  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் எரியாத மின் விளக்குகளையும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிப்பிடத்தையும் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai