சுடச்சுட

    

    முத்தூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 14th June 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராமசந்திரன், சதீஷ்குமார் ஆகியோர் உணவுப் பாதுகாப்புச் சட்டம், சத்தான உணவு 
    வகைகள், பாதுகாப்பான உணவு முறைகள், துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.
    மேலும் உணவுப் பொருள்கள்,  உணவு வகைகளில் கலப்படத்தை அறிந்து கொள்ளும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மாணவர்கள் பங்கேற்ற உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai