முத்தூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 14th June 2019 09:43 AM | Last Updated : 14th June 2019 09:43 AM | அ+அ அ- |

முத்தூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராமசந்திரன், சதீஷ்குமார் ஆகியோர் உணவுப் பாதுகாப்புச் சட்டம், சத்தான உணவு
வகைகள், பாதுகாப்பான உணவு முறைகள், துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.
மேலும் உணவுப் பொருள்கள், உணவு வகைகளில் கலப்படத்தை அறிந்து கொள்ளும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மாணவர்கள் பங்கேற்ற உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.