சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
By DIN | Published On : 19th June 2019 09:39 AM | Last Updated : 19th June 2019 09:39 AM | அ+அ அ- |

உடுமலையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
உடுமலை, காந்தி நகர் சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் செ.பா.சுப்பராமன் தலைமை வகித்தார். தலைமைக் காவலர் க.ராஜேந்திரன், முதல் நிலை காவலர் மு.கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 18 வயதுக்குகீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்கக் கூடாது, பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. மாணவ, மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை அருகே பாலப்பம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 30- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்க மாட்டோம் என ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.