உடுமலை அரசு கல்லூரியில் ஜூன் 21 இல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்புக்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்புக்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச.பொன்முடி (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் மே 20 ஆம் தேதி தொடங்கி மே 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இந்நிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதில் வணிகவியல் பாடப் பிரிவில் தரவரிசை 801 முதல் 900 வரையிலும்,  அறிவியல் பாடப் பிரிவுகளில் தர வரிசை 801 முதல் 850 வரையிலும், தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளில் தரவரிசை 901 முதல் 950 வரையிலும் உள்ள மாணவர்கள் ஜூன் 21 ஆம் தேதி காலை 10 மணியளவில் கல்லூரி வளாக த்தில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மே 20 ஆம் தேதி முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
  ‌w‌w‌w.‌g​a​c‌u‌d‌p‌t.‌i‌n  என்ற கல்லூரி இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண்ணைப் பதிவு செய்து தரவரிசை விவரம் அடங்கிய தகவல் கடிதத்தினைப் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வின்போது கட்டாயம் கொண்டுவரவேண்டும். இது குறித்துத் தனியாக எந்தவிதக் கடிதமும் கல்லூரியிலிருந்து அனுப்பப்படமாட்டாது. 
கலந்தாய்வுக்கு வரும்போது மாற்றுச்சான்றிதழ் (டி.சி), மதிப்பெண் பட்டியல்/தற்காலிக மதிப்பெண் பட்டியல், நிரந்தர ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் ஸ்டாம்ப் அளவிலான (சிறிய) போட்டோ இரண்டினையும் கொண்டு வர வேண்டும். 
சான்றிதழ்களின் நகல்கள் அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு ஆபிஸர்) அலுவலரால் கையொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், ஜாதியின் பெயர் ஆகியவை கண்டிப்பாக ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com