தாராபுரத்தில் 150 கிலோ  பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் தடை

தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
திருப்பூர் மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தாராபுரம் தினசரி மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். இதில்,  அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
 அதேபோல, தாராபுரம் பேருந்து நிலையத்தில் நடத்திய ஆய்வில் கலப்படத் தேயிலைத்  தூள் பயன்படுத்திய இரு தேநீர் கடைகளின் உணவுப் பாதுகாப்பு சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ மாம்பழங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பி.விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com