கல்பனா சாவ்லா விருதுக்கு 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th June 2019 09:21 AM | Last Updated : 24th June 2019 09:21 AM | அ+அ அ- |

கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் வீரதீரச் செயல்புரிந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இவ்விருது பெற தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு வீரதீரச் செயல்புரிந்த பெண்கள் அதற்கான ஆதாரத்துடன் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- பிரிவு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நேரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.