குழந்தைகளுக்கு காகித வடிவமைப்புப் பயிற்சி
By DIN | Published On : 24th June 2019 09:23 AM | Last Updated : 24th June 2019 09:23 AM | அ+அ அ- |

குழந்தைகளுக்கு காகித வடிவமைப்புப் பயிற்சி, கதை சொல்லுதல், குழந்தைகளின் நலன் குறித்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி ஆகியவை அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க (தமுஎகச) அமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். பொருளாளர் சம்பத், துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கதை சொல்லி வனிதாமணி குழந்தைகளுக்கு சிறுகதைகளை எடுத்துரைத்தார். கோவை வெங்கட், குழந்தைகளின் நலன் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் செல்லதுரை காகித வடிவமைப்புப் பயிற்சியளித்தார். அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள், முன்னாள் ஆசிரியர் சங்க ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.