அவிநாசி அருகே மரத்தில் கார் மோதியதில் இளைஞர் சாவு
By DIN | Published On : 25th June 2019 05:58 AM | Last Updated : 25th June 2019 05:58 AM | அ+அ அ- |

அவிநாசி, சின்ன கருணைபாளையம் அருகே புளிய மரத்தில் கார் மோதியதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி அருகே உள்ள ராக்கியபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் சிபி சக்கரவர்த்தி (27). பொறியாளரான இவர் ராக்கியபாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
அவிநாசி மங்கலம் சாலை, சின்ன கருணைபாளையம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சிபிசக்கரவர்த்தி, அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.