சுடச்சுட

  

  திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  மாவட்டச் செயலாளர் கே.வீரப்பன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கே.பூரணச்சந்திரன் முன்னிலை வகித்தார்.  
  அரசே ஆலையத்தை விட்டு வெளியேறு என வலியுறுத்தி ஜூலை 14ஆம் தேதி உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, குடிமங்கலம் ஒன்றியத்தில் மதமாற்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 101 இடங்களில் சிலை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
  நிர்வாகிகள் அருண், தினேஷ், உதயகுமார், விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai