சுடச்சுட

  

  உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஜூலை 4இல் நடைபெறுகிறது

  By DIN  |   Published on : 26th June 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூன் 30 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்க உள்ளன.
  உடுமலை, பள்ளபாளையத்தை அடுத்த செங்குளம் பகுதியில் ரூ. 6 கோடி மதிப்பில் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்கு என தனி சன்னிதிகளும், ஆஞ்சநேயர், ஆழ்வார்களுக்கு தனி சன்னிதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. 
  இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜூலை 4ஆம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி ஜூன் 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் யாக சாலை பூஜைகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து உடுமலை திருப்பதி பாலாஜி  சாரிட்டபிள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் இக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.  ஜூன் 30ஆம் தேதி மாலை யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து எட்டு கால பூஜைகள் நடைபெற உள்ளன.
  கும்பாபிஷேக விழாவில் முஷ்ணம் வராகதேசிக மகாதேசிகன் சுவாமிகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் 24ஆவது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு அருளாசி வழங்க உள்ளனர். 
  விழாவில் ஸ்ரீமத் அகோபிலமடம் ஆஸ்தான வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் பங்கேற்கிறார். கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளை இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் நடத்தி வைக்கிறார். 
  ஜூன் 30ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு தினமும் பக்தி கலாசார நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெற உள்ளன என்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai