சுடச்சுட

  

  அவிநாசி அருகே ஓடை நடுவே சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
  இதுகுறித்து கருமாபாளையம் பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையினரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
  கருமாபாளையத்தில் இருந்து அவிநாசி செல்வதற்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக அவிநாசி மடத்துப்பாளையம் சாலையையே பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை விட்டு, புதிதாக  ஓடையின் நடுவே சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.  இவ்வாறு அமைத்தால், மழைக் காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓடையின் அகலமும் குறுகும். எனவே ஓடையின் நடுவே சாலை அமைப்பதைத் தவிர்த்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையைப் புதுப்பித்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai