சுடச்சுட

  

  உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. 
  அதன்படி, உடுமலை வட்டம், பெதப்பம்பட்டி நான்கு சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது காலி குடங்களைக் கையில் வைத்துக்கொண்டு அனைவரும் முழக்கங்களை எழுப்பினர்.
  மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai