சுடச்சுட

  

  பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு

  By DIN  |   Published on : 26th June 2019 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்ற கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
  திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 
  இதைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல் மூன்று இடம் மற்றும் பாடவாரியாக முதலிடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.பழனிசாமி தலைமை வகித்தார்.  இதில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, தலைமை ஆசிரியர் குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai