சுடச்சுட

  

  வெள்ளக்கோவில் நகராட்சி ரெட்டிவலசு பகுதிக்கு அடிப்படை வசதிகள் தேவையென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர், வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
  ரெட்டிவலசு பகுதி வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட 2 ஆவது வார்டைச் சேர்ந்ததாகும். இங்குள்ள ஊர் நத்தத்துக்கு மேற்குப் பகுதியில் பல குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு தார் சாலை கிடையாது. படிக்கச் செல்பவர்கள் கரடு முரடான பாதையில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த ஊர் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குத் தெரு விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரப் பயணம் ஆபத்தாக உள்ளது.
  குடிநீர் குழாய்களும் இல்லாததால் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே எங்களுக்கு ஒரு பொதுக் குடிநீர் குழாய், தார் சாலை, தெரு விளக்குகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai