சுடச்சுட

  

  உடுமலை கிளை நூலகம் எண்-2 ல் வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  வாசகர் வட்டத் தலைவர் வி.கே.சிவகுமார் தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். இதில், திருப்பூர்
  ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (தணிக்கை) ப.மு.அகமது சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.  நிகழ்ச்சியில், வாசிப்பதனால் தனித் திறன் மேம்படுவது குறித்தும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தினசரி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.  மேலும் சுகாதார விழிப்புணர்வு குறித்தும், சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. 
  இதையொட்டி சிறுகதை, கவிதைகள், பொது அறிவு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் காந்தி உறைவிடப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நூலகர்கள் மகேந்திரன், செல்வராணி, அருள்மொழி  உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai