சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு

திருப்பூர், பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து

திருப்பூர், பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர், பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: 
திருப்பூர், பெரிச்சிபாளையம், அன்னமார் ஹரிஜனர் காலனியில் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்த பெரியோர்களை ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபட்டு வருகிறோம். மேலும், இறக்கும் குழந்தைகளை மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லாமல் சுடுகாட்டில்தான் அடக்கம் செய்து வருகிறோம். 
 இந்நிலையில், மாநகராட்சி சார்பில் சுடுகாட்டில் உரங்கிடங்கு அமைக்கும் முயற்சி மேற்கொள்வது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது மாநகராட்சி சார்பில் உரங்கிடங்கு அமைக்கப்படாது என்று இளநிலை பொறியாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார்.   
ஆகவே, தற்போது மீண்டும் உரக்கிடங்கு அமைக்க முயற்சி நடந்து வருவதை தடுத்து வேறு பகுதியில் உரக்கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com