அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா துவக்கம்

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் 44ஆவது குண்டம் திருவிழா விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் ஞாயிற்றுக்கிழமை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் 44ஆவது குண்டம் திருவிழா விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) துவங்குகிறது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி பூஜை, இரவு 10 மணிக்கு முகப்பள்ளயம் மயான பூஜை நடக்கிறது.
5ஆம் தேதி காலை 7மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், மாலை 5 மணிக்கு மாவிளக்கு, மாலை 5.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல், இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 6ஆம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல், காலை 9.15 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 
7ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடி இறக்குதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா ஆகியவை நடைபெறவுள்ளன.  விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, விழா குழுவினர், மார்த்தார் குல மக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com