சுடச்சுட

  

  அனைவரும் வாக்களிக்கக்கோரி அரசுக் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி

  By DIN  |   Published on : 17th March 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கக்கோரி திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 
  திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் அலகு 2 மற்றும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் ஆகியன சார்பில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  நிகழ்ச்சியில், வடக்கு வட்டாட்சியர் ஜெயகுமார் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். திருப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செண்பகவல்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். இதில், மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
  இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் சார்பில் வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி நடன நாடகத்தை நடத்தினர். 
  இதைத்தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 
  அதேபோல் 13ஆவது வார்டு மாஸ்கோ நகரில் ஒன்றாவது மண்டலப் பொறுப்பு உதவி ஆணையர் வாசுகுமார் தலைமையில், சுகாதார அலுவலர் முருகன் முன்னிலையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், சுகாதார ஆய்வாளர் சையத் அபுதாகீர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai