சுடச்சுட

  


  தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  தேர்தல் உதவி அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், தேர்தல் துணை வட்டாட்சியர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கூட்டத்தில், கொடிக் கம்பங்களில் உள்ள கொடிகளை அகற்ற வேண்டும். சுவர் விளம்பரங்கள், பதாகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.  வாக்குச்சாவடிகள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் எவ்வித கட்சிச் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது. கட்சி வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்க வேண்டும். பொதுக்கூட்டம்  நடத்த அனுமதி பெறுவது, தேர்தல் புகார்கள் சம்பந்தமாக 1,950 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து  எடுத்துரைக்கப்பட்டன.
  தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதி அவிநாசி கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், வாக்களிக்கும் நேரம் அதிகப்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. 
  இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
  கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, மு.சுப்பிரமணியம், நகரச் செயலாளர் ராமசாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் 
  எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பழனிசாமி,  திமுக  ஒன்றியச் செயலாளார் பழனிசாமி, மாவட்டப் பிரதிநிதி அவிநாசியப்பன், காங்கிரஸ் பொறுப்பாளர் சாய்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட்  ஒன்றியச் செயலாளர் கே.எம்.இசாக், பாஜக பொறுப்பாளர் சண்முகம், தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai