சுடச்சுட

  

  கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  By DIN  |   Published on : 17th March 2019 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அவிநாசி அருகே உள்ள கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
  திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு  சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா நடைபெற்று, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
  இதையடுத்து, 17ஆம் தேதி பூதவாகன காட்சி, 18ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல், 19ஆம் தேதி புஷ்ப விமானம், மலர்ப் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் 
  அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், 11 மணிக்கு யானை வாகனக் காட்சி ஆகியன நடைபெறுகின்றன. 20ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல், தேரோட்டம் நடைபெறுகிறது.
   21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், 22ஆம் தேதி மீண்டும் தேரோட்டம் நிலை வந்து சேருதல் ஆகியவை நடைபெறவுள்ளன. 23ஆம் தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி ஆகியவை நடைபெறுகின்றன. 24ஆம் தேதி அம்மன் தரிசனம், மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது. 27ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai