சுடச்சுட

  


  தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது.
  கூட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் மு.தணிகாசலம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.மணியன், கொள்கை பரப்புச் செயலர் கி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில், இலங்கையில் இருந்து வந்த தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் இலங்கை அமைப்பாளர் மருத்துவர் மு.செல்லையாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவர்கள் கலந்துகொள்ளும் வகையில் அகில உலக பாரம்பரிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  இதில் சங்கத்தின் இலங்கை பொறுப்பாளர்கள் மு.கந்தையா, சுப்ரமணியன், சிவகுமார், மாநில மக்கள் தொடர்பாளர் எம்.ஜெ.ஜாகீர் உசேன் மற்றும் ஆர்.பர்கத்துன்னிசா, மு.த.சங்கர், பி.முருகானந்தம் உள்ளிட்ட சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai