சுடச்சுட

  

  செல்லம்மாள் காலனி மாநகராட்சிப் பள்ளியில் ஐம்பெரும் விழா

  By DIN  |   Published on : 17th March 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருப்பூர் செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  திருப்பூர் செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் 9ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, கணினிப் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்.பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுதா, கிராமக் கல்விக் குழுத் தலைவர் இரா.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ் குமார் வரவேற்றார்.  2018-19-ஆம் கல்வியாண்டில் ஒல்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கான விருதை வட்டாரக் கல்வி அலுவலர் சு.விஸ்வநாதன் வழங்கினார்.
  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற திருப்பூர் மாவட்டக்  கல்வி அலுவலர் இரா.சித்ரா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பல்லடம் மாவட்டக்  கல்வி அலுவலர் கு.பெ.கனகமணி கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர்.  
  இதைத் தொடர்ந்து,  மாணவர்களின் கலை நிகழ்ச்சி, யோகா பயிற்சி நடைபெற்றது .
  இவ்விழாவில் ப்ரோநிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சிறுமுகை ரவிகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இரா.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai