சுடச்சுட

  

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புள்ள அனைவரையும் தூக்கிலிட வேண்டும்

  By DIN  |   Published on : 17th March 2019 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
  இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: 
  பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய  அனைவரையும் தூக்கிலிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய தகவலின்படி பல்வேறு கட்சிகளின் பொறுப்புகள் மற்றும் உறுப்பினராகவும் உள்ளவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களை வெளியில் கொண்டுவரக்கூடாது. தவறு செய்தவர்களை வெளியில் கொண்டுவரவேண்டும். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 20 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பட்டம் நடைபெற உள்ளது. 
   தொலைக்காட்சி நாடகங்களில் இது போன்ற சம்பவங்கள், கலாசாரச் சீரழிவுகளை காண்பிக்கின்றனர். கோயில்களில் வரும் வருமானங்களை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நீதிக் கதைகள், நீதிபோதனைகள் கற்றுத்தர பயன்படுத்தவேண்டும் என்றார்.
  இந்த சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai