சுடச்சுட

  

  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான சட்ட தலையீட்டு முகாம்

  By DIN  |   Published on : 17th March 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான சட்ட தலையீட்டு முகாம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
  இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு வழக்குரைஞர் பாண்டியன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் பா.பா.மோகன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவேற்றார். தீண்டாமை முன்னணி பொறுப்பாளர் நந்தகோபால் பேசினார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 50 வழக்குகளை உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்டோருக்கு  நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai