100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
By DIN | Published On : 24th March 2019 03:22 AM | Last Updated : 24th March 2019 03:22 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, குண்டடம் வாரச் சந்தையில் வருவாய்த் துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சனிக்கிழமை விநியோகித்தனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாவட்டம், குண்டடம் வாரச் சந்தையில் வருவாய் ஆய்வாளர் தீனதாயளன், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.