Enable Javscript for better performance
கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டது.
    இதையொட்டி கல்லூரியில் அனைத்துத் துறைகளிலும் பாடத் திட்டம், கற்றல் கற்பித்தல், உள் கட்டமைப்பு, மாணவியர் மேம்பாடு, நிர்வாகத் தலைமை மற்றும் மேலாண்மை, நிறுவனத்தின் மதிப்பு, சிறப்புப் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 
    மேலும் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, மகளிர் ஆய்வு புலம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், விளையாட்டுத் துறை, மாணவியர் விடுதி போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் முகமது அக்பர் அலிகான் (ஹைதராபாத்) தலைமையில் உறுப்பினர்கள் டாக்டர் ஓம்.மகோ தயா (மகாராஷ்டிரம்), பேராசிரியர் சுதாராய் (ராஜஸ்தான்) ஆகியோர் கொண்ட குழு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது.
    கல்லூரி செயலர் கெ.ரவீந்திரன், முதல்வர்(பொறுப்பு) கலைச்செல்வி, அக தர காப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் என்.ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai