Enable Javscript for better performance
திருப்பூரில் மாணவருக்கு சூடு வைத்த தனியார் பள்ளி ஆசிரியை கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் மாணவருக்கு சூடு வைத்த தனியார் பள்ளி ஆசிரியை கைது

    By DIN  |   Published on : 28th March 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் வீட்டுப் பாடத்தை தவறாக எழுதிய மாணவருக்கு சூடுவைத்த தனியார் பள்ளி ஆசிரியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 
     திருப்பூர், பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (35). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (28). இந்தத் தம்பதியின் ஒன்பது வயது மகன், கோல்டன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
     இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மாணவர் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் பார்த்தனர். இதுகுறித்து கேட்டபோது வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதால் ஆசிரியை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். 
     இதில், அந்தப் பள்ளியின் ஆசிரியை ரம்யா (22) மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவரின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஆசிரியை ரம்யா மீது, சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். 
     மேலும், காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai