Enable Javscript for better performance
திருப்பூர் அருகே ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 2 பந்தயக் காளைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் அருகே ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 2 பந்தயக் காளைகள் திருட்டு

    By DIN  |   Published on : 28th March 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பந்தயக் காளைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
    குண்டடத்தை அடுத்த ருத்ராவதி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). விவசாயியான இவர் சொந்தமாக 2 காங்கயம் இன பந்தயக் காளைகளை வளர்த்து வந்தார்.
    இந்தக் காளைகளை இரவு நேரத்தில் ருத்ராவதி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டுவது வழக்கம். அதேபோல செவ்வாய்க்கிழமை இரவும் காளைகளை அந்தத் தோட்டத்தில் சக்திவேல் கட்டி வைத்திருந்தார்.
    இந்நிலையில், புதன்கிழமை காலை வந்து பார்த்தபோது இரு காளைகளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் சுற்றிலும் பார்த்தபோது தோட்டத்துக்குள் வாகனம் வந்து சென்றதற்கான அடையாளம் இருந்ததும், காளைகளை அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
    இதுகுறித்து சக்திவேல் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குண்டடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
    திருடப்பட்ட இரு காளைகளும் ரூ.1.5 லட்சம் மதிப்புடையதும், நிறைய பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai