Enable Javscript for better performance
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 26 பேரின்  வேட்பு மனுக்களில் 13 பேரின் வேட்புமனுக்கள் புதன்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    வரும் மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட பகுஜன் சமாஜ், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 5 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
     மேலும், அமமுக சார்பில் எஸ்.ஆர்.செல்வம் உள்ளிட்ட 21 பேர் சுயேச்சைகளாகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களை கோவை காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் நர்வால் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை பரிசீலனை செய்தார். 
     அப்போது வேட்பாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பகுஜன் சமாஜ் வேட்பாளர் சி.அய்யனார், அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன், மக்கள் நீதிய மய்ய வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ப.ஜெகநாதன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
    8 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு: அதேபோல, இல.கதிரேசன், பி.கனகராஜ், டி.குமார், ஆ.செந்தில்வேல், எஸ்.ஆர்.செல்வம் (அமமுக), சி.ராஜ்கிருபா அபிராமி, சௌ.ராஜ்குமார், ப. ஜெகநாதன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
     அதேநேரத்தில் 13 சுயேச்சைகளின்  வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) மாலை 3 மணி வரையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 5 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai