Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு மின்னணு வாகன பிரசாரம்: ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விழிப்புணர்வு மின்னணு வாகன பிரசாரம்: ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்தார்

    By DIN  |   Published on : 28th March 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மின்னணு விளம்பர வாகன பிரசாரத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு விளம்பர வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். 
     பேட்டரியால் இயங்கக் கூடிய மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.
     இதனைப் பொதுமக்கள் பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, தேர்தல் வட்டாட்சியர் எஸ்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai