Enable Javscript for better performance
முத்தூர் அருகே பஞ்சு பொதிகள் தீயில் கருகி சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே புதன்கிழமை 150 பஞ்சு பொதிகள் தீயில் கருகி  நாசமானது.
     முத்தூர் - ஈரோடு சாலையில் உள்ள பழனியாண்டவர்புரத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (60). ஈரோடு சாலையில் இவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த ஆலை வளாக சுற்றுச் சுவருக்கு உள்புறம் பஞ்சு பொதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
     இவற்றின் அருகில் இருக்கும் மின் சாதனங்கள், மின் கம்பிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பஞ்சு பேல்களில் புதன்கிழமை திடீரெனத் தீப்பிடித்தது. 
     அதைத் தொடர்ந்து உடனடியாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ 
    விபத்தில் 150 பஞ்சு பொதிகள் கருகி நாசமாகின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai