Enable Javscript for better performance
ரூ.70.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசியில் புதன்கிழமை ரூ.70.45 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 4,150 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
     இவற்றில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ.5,500 முதல் ரூ.6,215 வரையிலும், டி.சி.எச். ரகப்பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ.5,500 முதல் ரூ.6,825 வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. 
     இரவு வரை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ.70 லட்சத்து 45 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வார ஏலத்தில் கடந்த வாரத்தை விட குவின்டாலுக்கு ரூ.400 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai