Enable Javscript for better performance
வெள்ளக்கோவிலில் ரூ.10.41 லட்சத்துக்கு தேங்காய் கொப்பரை விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலில் ரூ.10.41 லட்சத்துக்கு தேங்காய் கொப்பரை விற்பனை

    By DIN  |   Published on : 28th March 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ.10.41 லட்சத்துக்கு தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்றது.
     இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் கொப்பரை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 45 விவசாயிகள் 273 மூட்டைகளில் 13,873 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு 
    வந்திருந்தனர்.
     அவற்றை கரூர், வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூர் பகுதிகளில் இருந்து 9 வியாபாரிகள் வாங்குவதற்காக வந்திருந்தனர். கிலோ ரூ.50.85 முதல் ரூ.98.75 வரை ஏலம் போனது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்து 873 விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai