பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கதிருப்பூரில் நாளை முதல் சிறப்பு முகாம்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (மே 2) தொடங்குகிறது. 
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 2019 -ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இந்த முகாம் வரும் 31 ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 
 மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய விவரங்கள்: விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், வகுப்பு, சாதி, சிறப்பு இடஒதுக்கீடுகள் வேண்டுதல், முன்னாள் ராணுவ வீரர் மகன் அல்லது மகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற விவரங்கள், பதிவுக் கட்டணம் இணையதளம் மூலம் செலுத்துவதற்கான விவரம், பெற்றோரின் ஆண்டு வருமானம், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விண்ணப்பதாரர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com