Enable Javscript for better performance
மே தின விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மே தின விழா

    By DIN  |   Published On : 02nd May 2019 08:46 AM  |   Last Updated : 02nd May 2019 08:46 AM  |  அ+அ அ-  |  


    திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா

    திருப்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
    திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பி.என்.சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மே தின விழாவை ஒட்டி தொழிலாளர் முன்னேற்ற பேரவை கொடியை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ஏற்றிவைத்தார்.
    இதைத்தொடர்ந்து, போயம்பாளையம் பேருந்து நிறுத்ததில் பேரவைக் கொடியை மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொமுச பொது செயலாளர் ஆர். ரெங்கசாமியும், 15 வேலம்பாளையம் துணை மின்நிலையம் அருகில் உள்ள பேரவைக் கொடியை 5ஆவது வட்ட திமுக செயலாளர் ரத்தினசாமியும், அவிநாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் தொமுச பேரவைக் கொடியை செயலாளர் ஈ.பி.அ.சரவணனும், பெருமாநல்லுர் மின்வாரிய துணை மின்நிலையம் அருகிலுள்ள பேரவைக் கொடியை சி.டி.சி. வேலுசாமி மணிகண்டனும் ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். 
    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாலை தொமுச செயலாளர் ராமதாஸ், தொமுச கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    ஐ.என்.டி.யூ.சி. சார்பில் மே தின விழா: 
    திருப்பூர் பார்க் சாலையில் உள்ள ஐ.என்.டி.யூ.சி.தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் மாவட்ட கவுன்சில் தலைவரும், தேசியச் செயலாளருமான பி.கே.எம்.தண்டபாணி தொழிற்சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். 
    இதில், திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி கலந்துகொண்டு தொழிலாளர்ளுக்கு இனிப்பு வழங்கினார். 
    இதில், பனியன் சங்கத் தலைவர் பெருமாள் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    திமுக சார்பில் மே தின விழா
     வெள்ளக்கோவிலில் திமுக சார்பில் மே தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
    திமுக தொழிற்சங்கத்தினர் நடத்திய விழாவில் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், நகரச் செயலாளர் கே.ஆர்.முத்துக்குமார், திமுக விசைத்தறி தொழிற்சங்கத் தலைவர் வி.வி.தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    விழாவில் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகனசெல்வம், மோளக்கவுண்டன்வலசு கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 

    உடுமலையில் மே தின விழா

    உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் மே தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி, சனுப்பட்டி, முத்துசமுத்திரம், வெள்ளியம்பாளையம் ஆகிய கிராமங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதையொட்டி பெதப்பம்பட்டியில் அன்னதானம் நடைபெற்றது. 
    உடுமலை ஒன்றியத்தில் சின்னவீரம்பட்டி, குரல்குட்டை, கண்ணம்மநாய்க்கனூர், சாளையூர், கொடிங்கியம், வல்லக்குண்டாபுரம், செல்லப்பம்பாளையம், எலையமுத்தூர் ஆகிய கிராமங்களில் கொடி யேற்று விழா நடைபெற்றது. அப்போது தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 
    இதில் நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், வெ.ரங்கநாதன், கி.கனகராஜ், கே.தண்டபாணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள அலுவலகத்தில் காலை 7 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. 
    இதை தொடர்ந்து உடுமலை நகரப் பகுதிகளில் அண்ணா குடியிருப்பு, வெஞ்சமடை, பெரியகோட்டை பிரிவு, கண்ணமநாய்க்கனூர், எஸ்.வி.புரம், ஜீவா நகர், நகராட்சி அலுவலகம், மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றது. 
    மேலும் கிராமப்புறங்களில் தும்பலப்பட்டி, குரல்குட்டை, ஜல்லிபட்டி, கே.வல்லக்குண்டாபுரம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், ராகல்பாவி, குறிஞ்சேரி ஆகிய கிராமங்களில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.
    நிர்வாகிகள் கே.எஸ்.ரணதேவ், கா.கந்தசாமி, பி.சுப்பிரமணியம், வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    உடுமலையில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிங்சங்கங்கள் சார்பில் வெங்கடகிருஷ்ணா சாலையில் மே தின விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் என்.சேகர், வி.சௌந்திரராஜன்(ஏஐடியூசி), கே.ரங்கராஜன், எஸ்.ஜெகதீசன் (சிஐடியூ) உள்ளிட்ட பலர் பேசினர்.

    ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் மே தின விழா
     திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் மே தின விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
    திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே தின விழாவை உழைப்பாளர் தின விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டில் மே தின விழவையொட்டி அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஓவியம், பேச்சு, நடனம், பாட்டு உள்ளிட்ட போட்டிகளும், கிரிக்கெட், கைபந்து, கபடி, கோகோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் ஆண், பெண் ஊழியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. 
    இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பரிசுகளை வழங்கிப் பேசினார். அப்போது ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இணைந்து செயல்படுதல் போன்ற நற்பண்புகளுக்கும், நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்பட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கணபதி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp