விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோயில்களில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா : மே 11 இல் தொடக்கம்

 திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில் ஆகியவற்றில் வைகாசி விசாகத்  தேர்த் திருவிழா மே 11 ஆம் தேதி கிராமசாந்தியுடன் தொடங்குகிறது. 


 திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில் ஆகியவற்றில் வைகாசி விசாகத்  தேர்த் திருவிழா மே 11 ஆம் தேதி கிராமசாந்தியுடன் தொடங்குகிறது. 
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள விஸ்வேஸ்வரசுவாமி  கோயில், வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.  நிகழாண்டில் இத்திருவிழாவானது மே 11 ஆம் தேதி கிராமசாந்தியுடன் தொடங்குகிறது. இதையடுத்து, மே 12 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றமும், மே 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 
இதையடுத்து, மே 18 ஆம் தேதி மாலை 3.30 மணி அளவில் விஸ்வேஸ்வரசுவாமி கோயில் தேரோட்டமும், மே 19 ஆம் தேதி வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
 இதைத்தொடர்ந்து மே 20 ஆம் தேதி பாரிவேட்டையும், மே 21 இல் தெப்பத்திருவிழாவும், மே 23 ஆம் தேதி மஞ்சள் நீராட்டும், மே 24 இல் விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. 
தேர்த்திருவிழாவை ஒட்டி பரத நாட்டியம், பட்டமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com