சுடச்சுட

  

  திருப்பூரில் சர்வதேச கோடைக்கால பின்னலாடை கண்காட்சி: மே 15இல் துவக்கம்

  By DIN  |   Published on : 10th May 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் சர்வதேச கோடை கால சிறப்பு பின்னலாடை கண்காட்சி மே 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இரு முறை சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 46ஆவது முறையாக மே 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 3 நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்பூரில் சர்வதேச அளவிலான கோடைக்கால சிறப்பு பின்னலாடை கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். 
  கண்காட்சியை, மத்திய கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் துவக்கி வைக்கிறார். இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கத் தலைவர் சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மாகு உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai