Enable Javscript for better performance
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மே 20 இல் கலந்தாய்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று  தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மே 20 இல் கலந்தாய்வு

    By DIN  |   Published On : 15th May 2019 09:12 AM  |   Last Updated : 15th May 2019 09:12 AM  |  அ+அ அ-  |  

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (மே 15) வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் கு.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் வரும் 20ஆம் தேதி  முதல் தொடங்குகிறது.  தரவரிசைப் பட்டியலின்படி மாணவர்கள் தாம் விரும்பும் பாடப் பிரிவுகளில் இட ஒதுக்கீடு மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் தகுதியுள்ள வேறு பாடப்பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் மே 20 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும். தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் புதன்கிழமை (மே 15) ஒட்டப்படும். 
    மேலும் w‌w‌w.‌g​a​c‌u‌d‌p‌t.‌i‌n என்ற கல்லூரி இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண்ணைப் பதிவு செய்து தரவரிசையினை தெரிந்து கொள்ளலாம். வணிகவியல், பொருளியல், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை 1 முதல் 300 வரை உள்ளவர்களுக்கு மே 20ஆம் தேதியும், 301 முதல் 800 வரை உள்ளவர்களுக்கு மே 21 ஆம் தேதியும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை 1 முதல் 600 வரை உள்ளவர்களுக்கு மே 22 ஆம் தேதியும், தரவரிசை 601 முதல் 800 வரை உள்ளவர்களுக்கும் மே 23 ஆம் தேதியும், தமிழ் பாட தரவரிசை 1 முதல் 1000 வரை அன்று பிற்பகல் 2 மணிக்கும், ஆங்கிலப் பாடத் தரவரிசை 1 முதல் 900 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு
     நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும்போது மாற்றுச்சான்றிதழ் (டி.சி), மதிப்பெண்பட்டியல்/தற்காலிக மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றிதழ்,  மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ், விளையாட் டுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்டாம்ப் அளவிலான புகைப்படம் இரண்டினையும் கொண்டு வருதல் வேண்டும்.
    மதிப்பெண் பட்டியலின் மூலச் சான்றிதழைப் பள்ளியிலிருந்து பெறப்பட்ட பின்னர் கல்லூரி யில் சமர்ப்பித்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதிசெய்யப்படும். தவறினால் பாரதியார் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும். சான்றிதழ்களின் நகல்கள் அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு ஆபிஸர்) அலுவலரால் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp