முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 15th May 2019 09:07 AM | Last Updated : 15th May 2019 09:42 AM | அ+அ அ- |

அவிநாசியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அச்சங்க நிர்வாகிகள் சண்முகம், பழனிச்சாமி, ராஜன் ஆகியோர் கூறியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வடுகபாளையத்தைச் சேர்ந்த மாதம்மாள், கானூர் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள்ஆகியோர் பல ஆண்டுகளாக பணியாற்றி
வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு 144 நாள்களுக்கு மேலாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரனிடம் மனு அளித்தோம். ஆனால் அவர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை. பின்னர் திட்ட அலுவலர்களை சந்திந்தபோது, 4 மாதங்களுக்கு ஒரு முறை தான் சம்பளம் வழங்கப்படும்.
பணியாளர்களின் வங்கிக் கணக்கு முறையாக இல்லை. எனவே வருங்காலங்களில் உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என்றார்.
இதே நிலை நீடித்தால் விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.