Enable Javscript for better performance
வாக்காளர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வுப் பிரசாரம்

    By DIN  |   Published on : 17th May 2019 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவிலில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வருவாய்த் துறையினர் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
    ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் நகராட்சியைச் சேர்ந்த திருமங்கலம் வாக்குச் சாவடி எண் 248 இல் குளறுபடி காரணமாக மே 19 ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    இந்த வாக்குச் சாவடியில் 918 வாக்காளர்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு கையெழுத்து பெற வேண்டும்  என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    இதனடிப்படையில், வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து வருவாய்த் துறையினர் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai