கௌரவக் கொலையை  தடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கௌரவக் கொலையை தடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.  

கௌரவக் கொலையை தடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.  
 இதுதொடர்பாக அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் செ.குணசேகரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகாதேவி (23), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது திருப்பூரில் தங்கி வேலை செய்து வரும் அசோக் (27) ஆகியோர் கடந்த மே 12 ஆம் தேதி எங்களது சங்கத்தை அணுகினர்.
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விண்ணப்பங்களை வழங்கினர். இருவரது வயது, அடையாளச் சான்றிதழ்களை சரிபார்த்து திருமணம் செய்து வைத்தோம். 
இதைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இருவருக்கும் பாதுகாப்புக் கேட்டு மனு அளித்தோம். ஆனால், அந்தப் புகாரைப் பெற்றுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டினர். 
இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுவைப் பதிவு செய்த பிறகே எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண் காவல் ஆய்வாளர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று எச்சரித்தார்.மேலும், பெண்ணின் உறவினர்கள் என்னை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தனர்.  எனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலையில் நடந்ததுபோல கௌரவக் கொலை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com