முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மே 21 இல் கலந்துரையாடல் கூட்டம்
By DIN | Published On : 18th May 2019 06:45 AM | Last Updated : 18th May 2019 06:45 AM | அ+அ அ- |

பாரத ஸ்டேட் வங்கியின் வெள்ளக்கோவில் கிளை சார்பில் வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
செம்மாண்டம்பாளையம் சாலையிலுள்ள வங்கிக் கட்டடத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இக் கூட்டத்தில் வங்கி நிபுணர்கள் பலர் பங்கேற்கின்றனர். இதில் பாரத ஸ்டேட் வங்கி, அதன் துணை நிறுவனங்களின் சேவைகள் குறித்த வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவுள்ளது.
மேலும் விவசாய நகைக் கடன், வாகனக் கடன், மருத்துவ வைப்பு நிதி, விபத்துக் காப்பீடுகள், தங்கப் பத்திரம், பரஸ்பர நிதி, தொடர் வைப்பு நிதி, ஓய்வூதியத் திட்டம், பல்வேறு வகை வங்கிக் கணக்குகள் குறித்தும், தற்போதைய சலுகைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதில் வாடிக்கையாளர்கள் பங்கேற்று, பயன்பெறுமாறு வங்கியின் முதுநிலை மேலாளர் பி.பிரபு தெரிவித்துள்ளார்.