மூலனூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.33 கோடிக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 18th May 2019 06:44 AM | Last Updated : 18th May 2019 06:44 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 1 கோடியே 33 லட்சத்துக்கு பருத்தி ஏல விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மணப்பாறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 477 விவசாயிகள் தங்களுடைய பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பழனி, திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, காரமடை, அன்னூர், அவிநாசி, சேவூர், கரூர், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களிலிருந்து 18 வணிகர்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
மொத்தம் 6,420 மூட்டைகள் வரத்து இருந்தன. குவிண்டால் ரூ.5,200 முதல் ரூ.6,420 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,000. இவற்றின் விற்பனைத் தொகை ரூ. 1 கோடியே 33 லட்சம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 100 விலை குறைந்துள்ளதாக, விற்பனைக் குழு முதன்மைச் செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.