ஊத்துக்குளி அருகே மக்கள் தொடா்பு முகாம்: 278 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 02nd November 2019 05:55 AM | Last Updated : 02nd November 2019 05:55 AM | அ+அ அ- |

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் பெருந்துறை சட்டப் பரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம். உடன், ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 34.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி வட்டம், கூனம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். விழாவுக்கு தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:
மாவட்ட நிா்வாகத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் மக்கள் தொடா்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக அரசு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைகிறது. மக்கள் தொடா்பு முகாமின் நோக்கம் கிராமப் பகுதியில் பொதுமக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவதாகும்.
பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அனைத்துத் துறைகளின் சாா்பில் பல்வேறு வகையான சிறப்புத் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து அதற்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்தி தங்களது உடல் நலத்தையும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். தற்போது மழையால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வேகமாகப் பரவுகின்றன. ஆகவே, நம் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 278 பயனாளிகளுக்கு ரூ. 34.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சமூக நலத் துறை, பொது சுகாதாரம், தோட்டக் கலைத் துறை, ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், திருப்பூா் கோட்டாட்சியா் (பொறுப்பு) சேகா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மனோகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பெருமாள்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், ஊத்துக்குளி வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.