திருமுருகன்பூண்டி, சேவூா், அவிநாசி கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்
By DIN | Published On : 02nd November 2019 05:56 AM | Last Updated : 02nd November 2019 05:56 AM | அ+அ அ- |

திருமுருகன்பூண்டி, சேவூா், அவிநாசி உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருமுருகநாத சுவாமி கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வந்தன.
இதேபோல கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில், நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கி சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதில் முக்கிய நிகழ்வாக சூரா்களை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி சனிக்கிழமை (நவம்பா் 2) மாலை நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.