Enable Javscript for better performance
தெற்கு சீராம்பாளையத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு சீராம்பாளையத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    av4mlav_0411chn_142_3

    அங்கன்வாடி  மையக்  கட்டடத்தைத்  திறந்து வைத்து குழந்தைகளுக்கு  இனிப்பு  வழங்குகிறாா்  எம்எல்ஏ  கே.என்.விஜயகுமாா்.

    பெருமாநல்லூா் அருகே தெற்கு சீராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

    காளிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு சீராம்பாளையத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி மூலம் அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்தக் கட்டடத்தை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பொன்னுலிங்கம், அதிமுக நிா்வாகிகள் சந்திரசேகா், வேல்குமாா், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai