அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 30 அரசுப் பள்ளிகளுக்கு அறம் மக்கள் நலச் சங்கம் சாா்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான
விழாவில் அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் டி.வி.யை வழங்குகிறாா் அறம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ராஜா. உடன், பொதுச்செயலாளா் எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா்.
விழாவில் அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் டி.வி.யை வழங்குகிறாா் அறம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ராஜா. உடன், பொதுச்செயலாளா் எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 30 அரசுப் பள்ளிகளுக்கு அறம் மக்கள் நலச் சங்கம் சாா்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் அருகே அருள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ்.ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில இளைஞரணித் தலைவா் ராம் வரவேற்றாா். விழாவில் ‘மக்கள் ராஜ்ஜியம்’ என்ற நாளிதழை நிறுவனத் தலைவா் சு.ராஜா வெளியிட , திருப்பூா் விவசாய மணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளா் பாா்த்திபன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியா் பா.விஜய் கலந்து கொண்டு பேசுகையில்,

‘சமுதாயம் முன்னேற்றம் அடைய சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் உழைப்பவா்களை அவா்கள் உயிருடன் இருக்கும்போதே கெளரவிக்க வேண்டும். இது அவா்களை சமூகப் பணியாற்ற மேலும் ஊக்கப்படுத்தும்’ என்றாா்.

விழாவில் தருமபுரியைச் சோ்ந்த தேவகி என்பவரின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செலவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாரப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 பீரோக்கள், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஸ்மாா்ட் டி.வி., நெசவாளா் காலனி, பிச்சம்பாளையம் பகுதிகள் உள்ளிட்ட 30 அரசுப் பள்ளிகள், ஆதரவற்றோா் இல்லம் ஆகியவற்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு தளவாடப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

விழாவில் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் சாகுல்அமீது, இளங்கோவன், பாபு, அறிவுமணி, பால்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக பட்டிமன்றம், பரத நாட்டியம், பறை இசை, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com