முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பெருமாநல்லூரில் இந்து மக்கள் கட்சியினா் சாலை மறியல்
By DIN | Published On : 07th November 2019 04:40 AM | Last Updated : 07th November 2019 04:40 AM | அ+அ அ- |

இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினா் பெருமாநல்லூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை ஆகியவை அணிவித்து வழிபாடு நடத்தினாா். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில் அா்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியினா் பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலைப் பிரிவில் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.